2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

04 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்த முதியவர் மீட்பு

Sudharshini   / 2016 மே 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்து வந்த முதியவரை, ஹட்டன் பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மஸ்கெலியா, லக்கம் தோட்ட மயானத்தில் கடந்த 4 வருடங்களாக 70வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்; வசித்து வந்துள்ளார். அவ்வழியாக செல்லும் மக்கள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். தொடரும் சீரற்ற காலநிலையிலும், மயானத்திலே இவர் இருந்துள்ளார். இந்நிலையிலே, மேற்படி முதியவரை பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

குறித்த முதியவரின் நிலையை கவனத்திற்கொண்ட நீதவான், அவரை நோட்டன் சந்திரா முதியோர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வலுவிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .