பா.திருஞானம் / 2020 ஜூன் 10 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை ஐக்கிய தேசியகட்சி பெற்றுக்கொடுக்கும் என்பது பகல் கனவு என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், தொழிலாளர்களது பிரச்சினை பற்றிப் பேசமுடியாதவர்கள், 1,000 ரூபாய் சம்பளத்தை எப்படிப் பெற்றுக்கொடுப்பார்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பு, நுவரெலியாவில், இன்று (10) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆரம்ப காலம் முதல், 1,000 ரூபாய் சம்பளத்துக்கும் அரசாங்கத்தின் 50 ரூபாய் கொடுப்பனவையும் இல்லாமல் ஆக்கியவர்கள், ஐக்கிய தேசிய கட்சியினரே என்றும் இவர்களை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஓரம் கட்டவேண்டும் என்றும் கூறினார்.
இவர்கள், முதலாளிமார்களின் நலனுக்காக மட்டுமே செயற்படுவர் என்றும் மலையகப் பெருந்தோட்டங்களில், 95 சதவீதமான தோட்டங்கள் தனியாருக்கே சொந்தமானதாக இருக்கும் போது, பெருந்தோட்ட மக்களுக்கு எவ்வாறு 1,000 ரூபாயைப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக இருந்த நவீன் திஸாநாயக்கவே, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என்றும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தல் நடந்து முடிந்தவுடன், பெருந்தோட்ட மக்களுக்கு, 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதுத் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படல் வேண்டும் என்றும் அதற்கு ஒரு திடமான அரசாங்கம் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
39 minute ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
19 Apr 2026