Editorial / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜீ.எம்.குமார்
பலாங்கொடை, தியவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயர் ஒருவர், பலாங்கொடை பிரதேச செயலகத்திலுள்ள சுமார் 100 அடி உயரமான மரத்திழல் ஏறி, இன்று (27), உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பலாங்கொடை, ஹந்தகிரிய, தியவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீயானி புஷ்பலதா (37) எனும் பெண்ணே, இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். என்னும் பெண்னே இவ்வாறு மரத்தில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடாத்துகின்றார்.
தான் தற்போது வசிக்கும் நிலத்தை, தனக்கு சட்டப்பூர்வமாக வழங்கவேண்டும் என்று கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, பலாங்கொடை பிரதேச செயலாளர் ஹேமந்த பண்டாரவிடம் வினவியபோது, குறித்த நிலத்தில் வசிப்பதற்கு, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் அதனால், அவருக்கு அந்த நிலையத்தை வழங்க முடியாது என்றும் கூறினார்.
அத்துடன், அப்பெண் வசிப்பதற்க, வேறு ஒரு நிலத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், அதற்கு அவர் உடன்படவில்லை என்றும் எனவே, நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாகச் செயற்பட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago