R.Maheshwary / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் நடவடிக்கையொன்று நேற்று முன்தினம் (13) முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்ரராஜனின் வழிகாட்டலில், மைக்ரோ கிரடிட் நிறுவனம் மற்றும் கோஜோ மன்றம் என்பவற்றின் கீழ் கர்ப்பிணிகளுக்கு தலா 5,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதற்கமைய, பிரவுன்ஸ்வீக் தோட்டத்திலிருந்து 22 கர்ப்பிணிகள், பிரவுன்லோ தோட்டத்தில் 27 பேர், கிளென்டில் தோட்டத்தில் 13 பேர், சிறிய மஸ்கெலியாவில் 17 பேர், மஸ்கெலியாவில் 26 பேர் என மொத்தமாக 105 கர்ப்பிணிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.


7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025