Editorial / 2020 ஜூன் 05 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ இராணிக்காடு மாவெளி வனப்பகுதியில், “கொக்கும்பொத்” என்றழைக்கப்படும் ஒருவகை வாசனைத் திரவிய பட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த நபரை, பொகவந்தலாவ பொலிஸார், இன்று(5) கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 127 கிலோகிராம் வாசனைத் திரவியப் பட்டைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, மேற்படி நபர் வனப்பகுதிக்குச் சென்று, மேற்படி பட்டைகளை வெட்டியுள்ளார் என்றும் இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பட்டைகளை அதிக விலைக்கு விற்பனைச் செய்வதற்கு மேற்படி நபர் முயற்சித்துள்ளார் என்று, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago