2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தம்புள்ளை வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை நகரில் இன்று காலை  இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்தடன் மேலும்  ஐவர் காயமடைந்துள்ளனர்.

இவ் வாகன விபத்தில் கல்னேவ பிரதேசத்தில் வசித்த 45 வயதான ஆர். விமலசேன என்பவரே உயிரிழந்தவராவார்.

தம்புள்ளை நகரில் வான் ஒன்று தடம் புரண்டதனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் வானின் சாரதியை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை  தம்புள்ளை நீதிமன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .