2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரச கட்டிட காணியை ஈடுவைத்த நபர், கடன் வழங்கிய வங்கிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயமும் அக்குறணை பிரதேசசபையின் வர்த்தக கடைகளையும் உள்ளடக்கிய காணியை தனி நபரொருவர் தனியார் வங்கியில் ஈடுவைத்து 20 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ள நிலையில், அக்கடனை மீளசெலுத்தாததினால் ஏலத்தில் விடப்பட்டள்ளதாக அக்குறணை பிரதேசசபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் தெரிவித்தார்.

1991ஆம் ஆண்டு பிரதேசசபைக்கு அன்பளிப்பாக கிடைத்த இக்காணியில் பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயம் கட்டப்பட்டபோது, அதற்கான உறுதியை முறையாக பெற்றுக்கொள்ளவில்லையெனவும் பிரதேசசபையின் தலைவர் கூறினார்.

அரச கட்டிடங்கள் அடங்கிய காணியை சட்டவிரோதமாக ஈடுவைத்தவருக்கும் ஈடு எடுத்த வங்கிக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்  தாக்கல் செய்யவுள்ளதாக ஏ.எம்.எம். சிம்ஸான் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேசசபை   பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த அக்குறணை பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி அங்கத்தவர் ராமய்யா ஜெயசீலன,; போலியான முறையில் அளவை செய்து இவ்விடத்தை ஈடுவைத்துள்ளதாகவும் தனக்கு சொந்தமான காணியில் இரண்டு பேர்ச்சஸ் காணியையும் சேர்த்து அளந்துள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .