2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாணத்தில் உள்ள சிறந்த முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மாலை கண்டி குயின்ஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மகாண தமிழ் கல்வி கைத்தொழில் அமைச்சர் திருமதி அனுசியா சிவராசா, சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க உற்பட பலர் கலந்து கொண்டனர்.  

இங்கு முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க உரையாற்றிய போது,

கடந்த முப்பது ஆண்டுகளாக நாடு அமைதியற்ற நிலையலிருந்த போதும் எமது பொருளாதாரத்தை பாதுகாத்து இன்றைய நிலைக்கு நாட்டைக் கொண்டுவர உதவியவர்கள்  இந்நாட்டின் வியாபாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் முயற்சியாண்மைத் துறையில் ஈடுபட்டவர்களாகும். எனவே அவர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவிப்பது மிகப் பொருத்தமானதாகும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .