Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்டிய பிரதேசங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றமை சிறுவர் உரிமை மீறல் ஆகும். இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரிடோ சிறுவர் கழக ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரிடோ சிறுவர் கழக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்தது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாடசாலை சூழலில் பாதுகாப்பற்ற முறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதால் ஹய்பொரஸட், வெஸ்டோல் தமிழ்வித்தியாலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுவொரு பாரதூரமான விடயம். இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றிருந்தன. இவ்வாறான சம்பவங்கள் பெருந்தோட்டப் பகுதியில் அதிகமான நடைபெறுவது கவனிக்கத்தக்கதாகும்.
ஆயினும், இது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே இவ்வாறான சம்பங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால், சிறுவர்களின் உயிருக்கும் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் பாதிப்பேற்பட்டிருக்கிறது.
சிறுவர் உரிமை சமவாயத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உயிர் வாழும் உரிமை, கல்வி பெறும் உரிமை, சுகாதார வசதிகளையும் சேவைகளையும் பெறும் உரிமை என்பன அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விடயம் அல்ல. பாடசாலைச் சூழலிலுக்கு அருகிலுள்ள தோட்டங்களுக்கு விடுமுறை நாள்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். கிருமிநாசினி தெளிக்கும்போது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிருமிநாசினி தெளிக்கப்படுவது தொடர்பாக பகிரங்க அறிவித்தல் வழங்கப்படுதல் போன்ற முன்னெச்சரிக்கை எடுக்கப்படுவதை வலியுறுத்தும் நியதிகள் இருப்பினும் இது தொடர்பாக எதுவித அக்கறையயும் காட்டாமல் சம்பந்தப்பட்டவர்கள் நடப்பது சிறுவர் உரிமைகள் தொடர்பாக அக்கறை காட்டாததைக் குறிக்கிறது.
இது தொடர்பாக பிரிடோ சிறுவர் கழக வலையமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளுகிறது. பாடசாலை காணிகளை வெளியார் அத்துமீறி ஆக்கிரமித்திருப்பதால் தான் இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பின்னரே அரசியல்வாதிகளுக்கு பாடசாலை காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது என்பது ஆச்சரியமான விடயம். பாடசாலை காணிகளில் அல்லாமல் தோட்டங்களுக்கு சொந்தமான காணிகளில் கிருமிநாசினி தெளிக்கும்போதும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்திருப்பதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
வெறுமனே கிருமிநாசினி தெளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்திவிடாமல, அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீதும் பொறுப்பானவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதிருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எமது சிறுவர் வலையமைப்பு கோருகிறது. வெறுமனே சிறுவர்கள் சுகவீனமுற்றார்களென்று நோக்காது, சிறுவர் உரிமையை மீறும் செயலென்று நோக்கவேண்டுமென்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
4 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago