2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மின்சாரப் பொறியில் சிக்குண்டு மாணவன் பலி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எம்.எப்.எம்.தாஹிர்)

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின்சாரப் பொறியொன்றில் சிக்குண்ட பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அமுனுமுல்ல, தெளிபெத்த, வெலிமடை என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அமுனுமுல்ல, தெளிபெத்த வெலிமடையை வசிப்பிடமாகக் கொண்;ட  சன்ஜீவ குமார (வயது 12) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த மாணவன்; தனது வீட்டுத் தோட்டத்தினூடாக சென்றுகொண்டிருந்த வேளையில்,  இனந்தெரியாதோரினால் இணைக்கப்பட்டிருந்த மின்சார பொறிக்கு சிக்குண்டு பலியானார்.

இச் சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .