2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிணற்றில் விழுந்து யுவதி தற்கொலை

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனுவில என்னுமிடத்தில் யுவதி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், நிலூஷா ஹேமமாலி என்ற 21 வயது யுவதியே இவ்வாறு உயிரழிந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த யுவதியின் தாயிடம் கேட்டபோது,  தனது மகள் தினந்தோரும் தொலைபேசியின் மூலம் தன் காதலனுடன் உரையாடுவதை கண்டித்ததன் காரணமாக அவர் கினற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.ஏ.ஸீ.எம். ரமீம் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸ் அதிகாரி பிரேமதாச மேற்கொண்டு வருகின்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .