2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பெரிய வெங்காய விதையை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான விஷேட திட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

2012ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு தேவையான பெரிய வெங்காய விதையை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான விஷேட திட்டமொன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாத்தளை மாவட்ட விவசாய பணிப்பாளர் பிரசன்ன பல்லேமுல்ல தெரிவித்தார்.

இவ்வருடத்துக்கு தேவையான பெரிய வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதற்காக 30, 000 கிலோ பெரிய வெங்காயம் இன்று மாத்தளையிலிருந்து நுவரெலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  

பெரிய வெங்காய விதைகளை வெளிநாட்டிலிருந்து தருவிப்பதற்கு வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் வரை செலவாகின்றது.

தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. மத்திய மாகாணத்தில் 7000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிய வெங்காய விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .