Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள மஹாவலி கங்கையில் காரொன்று வீழ்ந்ததினால், அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து வந்த இக்கார் பாதையை விட்டு விலகிச் சென்று மஹாவலி ஆற்றில் வீழ்ந்துள்ளது.
சுதத் ரோஹன குமார (வயது 30), ரொஷான் ஜயவர்தன வீரசிங்க (வயது 24), மல்லிகாகே ரோஹன குமார (வயது 23) ஆகியோரோ இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago