2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

லொறி விபத்தில் சாரதி பலி

Super User   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை – நுவரெலியா வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் பாரந்தூக்கி லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியதில் அதன் சாரதி ஸ்தலத்தில் கொல்லப்பட்டார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பாரந்தூக்கி லொறி கொழும்பில் இருந்து மேல்கொத்மலை திட்ட வேலைக்கு சென்று விட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த  போது விபத்தில் சிக்கியுள்ளது.

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .