Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இடுப்பில் துணியை கட்டி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் சேலை இறுகியதால் அச்சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த பரிதாபச் சம்பவமொன்று ஹட்டன், பண்டாரநாயக்கா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் 13 வயதான கிருஷ்ணமூர்த்தி திஸாந்தன் என்ற சிறுவனே உயிரிழந்தவனாவார்.
வழமையான ஊஞ்சல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மேற்படி சிறுவனின் இடுப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்த சேலை கழன்று கழுத்தை இறுக்கியதை அடுத்தே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தினால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ள சிறுவனை காப்பாற்றுவதற்கு சம்பவ இடத்தில் எவரும் இல்லாத பட்சத்திலேயே அவன் உயிரிழக்க சேரிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுவனின சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
xlntgson Saturday, 12 February 2011 09:46 PM
உண்மையிலேயே பரிதாபமான நிகழ்ச்சிதான் இது, பாவம்! மனவருத்தம்!
விதியும் மரணமும் எப்படி எல்லாம் வருகிறது!
மனிதர்கள் சுகம் அனுபவிப்பதும் ஒரு மணித்துளிதான் உயிர் பிரிவதும் ஒரு மணித்துளி தான்!
சண்டைபிடிப்பது பலவருடங்கள்!
கோபதாபங்கள் பலவருடங்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025