2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையகத்தில் சீரற்ற காலநிலை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, மலையக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுகின்ற அதேவேளை, அதிகூடிய குளிர் ஏற்பட்டுள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடை மழையால் காசல்ரீ, மவுசாகலை, கெனியன், லக்ஸபான, விமலசுரேந்திரபுர நீர்த்தேக்கங்களில்; நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

தலவாக்கலை, லிந்துலை, மெரேயா பகுதிகளிலுள்ள சில தோட்டக்குடியிருப்புக்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X