2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அலவத்துகொடை கலைமகள் தமிழ் வித்தியாலயம் காலவரையின்றி மூடப்பட்டது

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரே ஒரு தமிழ் பாடசாலையான அலவத்துகொடை கலைமகள் தமிழ் வித்தியாலயம் மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று வியாழக்கிழமை முதல் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை வலய கல்வி காரியாலய அதிகாரிகளுடம் நேற்றுமுன்தினம் நடத்திய ஆலோசனையின் பின் வலய கல்வி காரியாலயத்தின் சிபாரிசுக்கு அமைய இப்பாடசாலையை காலவரையரையின்றி மூடிவிட்டதாக பாடசாலை அதிபர் எஸ்.பீ.செல்வராஜ், தமிழ்மிரர் இணையத்தளத்திற்று தெரிவித்தார்.

பாடசாலையின் பிரதான மூன்று மாடி கட்டிடத்திற்கு பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் மற்றைய பகுதிகளிலும் மண் ஆங்காங்கே சரிந்து கொண்டு போவதாகவும் கூறிய அதிபர், 420 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையை பாதுகாப்பின்றி மீண்டும் ஆரம்பிக்க முடியாது என்றும்; தெரிவித்தார்.

பாடசாலையை தொடர்ந்து மூடி வைப்பதனால் மாணவர்களுடைய கல்வி நிலைமை பாதிப்படைவதாகவும் அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X