2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வத்துகாமம் வீதியில் பாரிய மண்சரிவு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மடவளை நகரில் வத்துகாமம் வீதியில்  ஒரே இடத்திலுள்ள ஏழு வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

மலையகப் பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இப்பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மண்சரிவு ஒன்று ஏற்பட்டதில் இரு மாடிக்கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.

இதை அண்மித்த ஒரு மண் மேட்டின் மீதுள்ள நான்கு கட்டிடங்களும் அயலிலுள்ள மூன்று கட்டிடங்களும் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

மடவளை வத்துகாமம் வீதியில் உள்ள இம் மண்சரிவு அபாயத்தை தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ள பிரதேசவாசிகள் முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் பாரிய ஆபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X