2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எலிபொட தோட்டத்திற்கு வந்த புதிய விருந்தாளிகள்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலிபொடை மேற்பிரிவு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 சிறிய சிறுத்தைக் குட்டிகளை தோட்ட மக்கள் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று 3ஆம் திகதி காலை 11.00 மணியளவில் மாட்டிற்கு புல்லறுக்கச் சென்றவர்கள் திடீரென அவ்விடத்திலிருந்து சிறுத்தையொன்று ஓடியதைப் பார்த்துள்ளனர்.

அதன்போது அவ்விடத்தில் தேடி பார்த்த போது அங்கு 3 சிறுத்தைக் குட்டிகள் காணப்பட்டதையடுத்து நாய்களால் குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக்கருதி அவர்கள் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சிறுத்தைக் குட்டிகளை  நல்லதண்ணி வனஇலாகா அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸ்; நிலையப் பொறுப்பதிகாரி சமன்குமார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X