2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஸ்ரீபாத கல்லூரியின் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழுக்கான இறுதிப்பரீட்சை

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 04 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழுக்காக 2010ஆம் ஆண்டில் இடம் பெறவேண்டிய இந்தப் பரீட்சையில் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை எழுத்துப் பரீட்சையும் 26ஆம், 27ஆம் திகதிகளில் செயன்முறைப் பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. இந்தப் பரீட்சைக்கு கட்டுறுபயிலுநர்களும் மாணவர்களும் கடந்த முறைப் பரீட்சையில் சித்திபெறாத மாணவர்களும் தோற்றவுள்ளனர். இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களுக்கான அனுமதி பத்திரங்கள் விரைவில் கிடைக்கவுள்ளன. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் இம்மாதம் 20ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்பதாக பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு சமுகந்தருதல் வேண்டும். அதேவேளை தற்போது பாடசாலைகளில் கட்டுறு பயிலுநர்களாக சேவையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு இந்தப் பரீட்சையில் தோற்றுவதற்காக இம்மாதம் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கற்றல் விடுமுறையை வழங்குவதற்கு குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X