2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

முச்சக்கர வண்டிமீது மரம் உடைந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக், சீ.எம்.ரிஃபாத்)

கண்டி பன்விலை மடுல்கலையில் பாதையால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததினால் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இவ்விபத்தானது கடும் மழைக்கு மத்தியில் பாதையில் பன்விலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மடுல்கலை என்ற இடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் கண்டி மடவளை என்ற இடத்தைச் சேர்ந்த முஹம்மட் நிஸார் முஹம்மட் நதீம் (35) என்பவராவார். அதே இடத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதியான அப்துல் ஹசன் முஹம்மத் இர்பான் (28) என்பவர் இவ்விபத்தில் படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X