2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு நாவலப்பிட்டியில் ஆசீர்வாதம்

Super User   / 2011 பெப்ரவரி 05 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆசீர்வாதம் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி கிரிக்கெட் பந்தில் பொதுமக்கள் கைவிரல் அடையாளம் பதிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முதலாவது கைவிரல் அடையாளத்தினை பதித்ததை தொடர்ந்து நாவலப்பிட்டி பிரதேச மக்கள் கைவிரல் அடையாளத்தினை பதித்தனர்.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு வென்றெடுத்த உலக கிண்ணமும் இன்று  நாவலப்பிட்டி நகரில் அலங்கார ஊர்தி ஒன்றில் காட்சிபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X