2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்டியில் ஹேரோயினுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை, அக்குறணை ஆகிய பிரதேசங்களுக்கு பெருமளவில் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கண்டி, கன்னோருவ பிரதேசத்தில் வைத்து கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவரான  சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்தனர்.

சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது,  அவரிடமிருந்து  இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின்; பேரில் பொலிஸாரால் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X