2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உதாகம மாதிரிக் கிராமத்தில் வீடுகள் கீழிறங்கும் அபாயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, தெல்தோட்டைப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த உதாகம மாதிரிக் கிராமத்திலுள்ள பல வீடுகள் கீழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்தது.

பல வீடுகளில் வெடிப்பு எற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உதாகம கிராமத்தில் ஒரு வீடு தற்போது புதையுண்டுள்ளதுடன், இரு வீடுகளில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.குணவர்தனா  தெரிவித்தார். இது தவிர, பல்லேகம பகுதியில் சிறிய வெடிப்பு காரணமாக பாதை உடைந்திருப்பதாகவும் கந்தேகம, கீரமண்யாய போன்ற இடங்களிலும் சிறிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X