2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கட்சித் தலைவர்களுக்கு கருத்துகளை உள்வாங்கும் மனப்பாங்கு வேண்டும்: வே.இராதாகிருஷ்ணன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கட்சித் தலைவர்களுக்கு ஜனநாயகத்தை மேம்படுத்தும் வகையில்  உரிய  கருத்துக்களை உள்வாங்கும் மனப்பாங்கு வளர வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் அரசியல்த்துறை பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியில் கம்பளை உடபளாத்த பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் நேற்று சனிக்கிழமை புசல்லாவை கட்சிப் பணிமனையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கட்சிகள், மாற்றுக் கட்சியினரின் சிறந்த கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும்.  கட்சித் தலைமைகள் இறுக்கமான நடையை மாற்றி நெகிழும் போக்குடன் நடந்து கொள்வது சிறந்தது.  

இக்கூட்டத்தில் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸ் மற்றும் முதன்மை  வேட்பாளர் இரா. மணிசேகரன்   ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X