2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மத்திய மாகாணத்தில் சீரற்ற காலநிலையால் வீதிகள் சேதம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாணத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் சுமார் 800 கிலோமீற்றர் தூரமான வீதிகள் சேதமடைந்துள்ளதாக  மத்திய மாகாண நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்துள்ளார்.

மண்சரிவுகள், பிரதான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்றவை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள பிரதான பாதைகள் பல சேதத்துக்குள்ளாகியுள்ளன. இதனால் சுமார் 162 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள்; சீரற்ற காலநிலையால் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X