2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இ.தொ.கா. வெற்றிக்கு கொழும்புவாழ் இளைஞர்கள் பங்களிக்கவேண்டும்; அருள்சாமி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக மாற்றத்திற்கு வித்திடப்போகும் மத்திய மாகாண சபை தேர்தலில்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அமோகமாக வெற்;றி பெறச்செய்வதற்கு கண்டி மாவட்டத்தை சேர்ந்த கொழும்பு வாழ் இளைஞர்கள் தங்களுடைய பூரண பங்களிப்பை வழங்க வேண்டும் என மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் முதன்மை வேட்பாளருமான எஸ்.அருள்சாமி கொழும்பு வாழ்; இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக இழந்த அரசியல் அநாதைகளாக பெரும்பான்மை இன அரசியல்வாதிகளினதும்இ ஏனையவர்களினதும் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சி வாழும் ஒரு நிலையிலிருந்து  கண்டி மாவட்ட மக்களை மீட்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

வாழ்வில் ஒரு சமூக மாற்றத்தையும்இ புதிய நம்பிக்கையும் உருவாக்க திடசங்கற்பம் éண்டு கண்டி மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தையும் பேதமற்ற அரசியல் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்னை களத்தில் இறக்கியுள்ளது.

எனவே, ஏமாற்று அரசியலையும் மக்களை வைத்து அரசியல் வயிற்றுப்பிழைப்பு கைங்கரியத்தையும் தவிர்த்து மக்கள் பிரதிநிதியாக என்னை அனைத்து தமிழர்களுக்கும் சேவை செய்ய உறுதியளிக்கின்றேன்.

இதனடிப்படையில் கொழும்புவாழ் கண்டி மாவட்ட இளைஞர்கள் எனது வேண்டுகோளை செவிமடுத்து கொழும்பு நகரில் பல்வேறு துறைகளில் தொழில் புரிகின்ற நீங்கள் உங்கள் தொழில் தருனர்களிடம் தேர்தல் தினத்தன்று விடுமுறையை பெற்று உங்கள் வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் தமிழன் தலைநிமிர்ந்து வாழ துணிச்சலுடன் செயற்பட இருக்கும் என்னையும் மத்திய மாகாணத்திற்கு தெரிவு செய்ய வாக்களிப்பதுடன் ஊர் மக்களை முறையாக வழி நடத்தி சரியாக வாக்களிக்கும் உந்து சக்திகளாகவும் நீங்கள் மாற வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X