2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பஸ் சில்லேறியதில் பெண் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மடவளை சிரிமல்வத்தை சந்தியில் பஸ் சில்லொன்று பெண்ணொருவர் மீது ஏறியதில் படுகாயமடைந்த அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலையே இந்த சம்பவம்  இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதையில் ஒருபுறம் இருந்து முச்சக்கர வண்டியில் இறங்கி குறிப்பிட்ட தனியார் பஸ் வண்டிக்கு ஏறுவதற்கு பாதையை கடந்த போதே பஸ் வண்டியின் முன்பக்க சில்லொன்று அவரது காலில் ஏறியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வத்துகாமம் பொலிஸார்; சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X