2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மகள் வல்லுறவுக்குட்படுத்தி கொலை; தந்தைக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தனது மகளை வல்லுறவிற்கு உட்படுத்தியதன் பின்னர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு  மரண தண்டனை விதித்து நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

2002 ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த தனது மகளை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்திய பின் அவரை கொலை செய்ததாக அந்த சிறுமியின் தந்தைக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கொலை, பாலியல் வல்லுறவு, மற்றும் சிறு வயதுடைதானவரை அபகரித்தல் ஆகிய  குற்றங்களை சுமத்தியே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் விசாரணைக்கப்பட்டுவந்தது.

அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றங்களில் அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

  Comments - 0

  • najimudeen Saturday, 14 September 2013 04:57 PM

    அவன் என்ன மனிதனா மிருகமா? அவனுக்கு மரண தண்டனை பத்தாது, இப்படியும் மனிதர்களா???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X