2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அமைச்சரின் மகனுக்கு அதிகூடிய வாக்கு

Super User   / 2013 செப்டெம்பர் 22 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபை தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட காணி மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் மகன் பி.வி.தென்னகொன் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக பி.வி.தென்னகொன் 51,591 விருப்பு வாக்குகளையும் பந்துல யலேகம 45,460 விருப்பு வாக்குகளையும் பராக்ரம திசாநாயக்க 24,686 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித் அலுவிகார, 29,545 விருப்பு வாக்குகளையும் சஞ்சீவ கவிரத்ன 24,249 விருப்பு வாக்குளையும் ரொகான் பண்டாரநாயக்க 14,415 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இந்த மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஒருவர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .