2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஒதுக்கியுள்ள நிதி எந்தவிதத்திலும் போதுமானதல்ல: உறுப்பினர் வேலுகுமார்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

முடிவடைந்த மத்திய மாகாண சபை தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் பெருவாரியான வாக்கை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.அதற்கு அரசாங்கம் அவர்களுக்கு ஒதுக்கியுள்ள நிதி எந்தவிதத்திலும் போதுமானதல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் வரவு-செலவு திட்டத்தின் மீதான பொது நிலை கலந்துரையாடல் மத்திய மாகாண சபை தலைவர் மஹிந்த அபேகோன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வரவு-செலவுதிட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பிற்கு 28 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டள்ளது. இந்த நிதியானது தனியே பாதை அபிவிருத்திக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டள்ளது.

தோட்ட உட்கட்டமைப்பு என்பது ஒரு பரந்துபட்ட அமைச்சாகும். எனவே, இதற்கு ஒதுக்கப்பட்டள்ள நிதியில் வேறு எந்தவிதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்க முடியாது.இது தோட்ட தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

முடிவடைந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் பெருவாரியான வாக்கை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.அதற்கு அரசாங்கம் அவர்களுக்கு ஒதுக்கியுள்ள நிதி எந்தவிதத்திலும் போதுமானதல்ல.

அதேபோல 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டது போல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மானிய முறையிலான கோதுமை மாவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள மாடி வீட்டு திட்டத்தை கைவிட்டு 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டது போல 10 பேர்ச்சஸ் காணியை வழங்கி தனியான வீடமைப்பு திட்டத்தை எற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .