Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 06 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்தும் தன்னை நம்பி, வானில் பயணித்த மூவரின் உயிரை சாரதியொருவர் பத்திரமாக மீட்ட சம்பவம் மாத்தளையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
பொருட்களை ஏற்றிகொண்டு மாத்தளையிலிருந்து கண்டி நோக்கி வானொன்று புறப்பட்டு சென்றுள்ளது. இவ்வானில் மூவர் பயணித்துள்ளனர்.
வான், அலவத்துகொடை நகரை தாண்டும் போது அதன் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் சாரதி அதனை பொருட்படுத்தாது மிகுந்த சிரமத்தின் மத்தியில் வானை ஓரமாக நிறுத்தி தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தன்னுடன் பயணித்தவர்களுக்கு கூறியுள்ளார்.
சாரிதியுடன் பயணித்தவர்கள் உடனடியாக அவரை, அக்குறணை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாத்தளையை சேர்ந்த சங்கிலி தர்மலிங்கம் என்ற 59 நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
24 minute ago