Gavitha / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரில் முதல் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட நபரது வர்த்தக நிலையத்தில், பழுதடைந்த நிலையில் இருந்த சுமார் 50 கிலோகிராம் மீன்களை அழிப்பதற்கு, ஹட்டன்- டிக்கோயா நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவெல தெரிவித்தார்.
சுமார் 50 கிலோகிராம் மீன்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேற்படி வர்த்தக நிலையம் இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை உரியமுறையில் பதப்படுத்த முடியாததன் காரணமாக அழுகிவிட்டன என்றும் வியாபார நிலையத்திலிருந்து வந்த துர்வாடையைக் கருத்திற்கொண்டு மீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026