Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 09 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா, ஆ.ரமேஸ்,பி.கேதீஸ், மு.இராமச்சந்திரன்
தலைவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் நேற்று (08) இரவு சுமார் 10 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகஸத்தர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னால் வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது மற்றுமொரு முச்சக்கரவண்டியொன்று தமக்கு உரிய பக்கத்திலிருந்து மாற்று பக்கத்தில் வந்ததால் அந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால், வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் வாகன சாரதிகள் இவ்வீதிகளை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு, பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago