Kogilavani / 2017 மே 16 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ்
அக்கரப்பத்தனை, அப்பகிரன்லி தமிழ் வித்தியாலய அதிபரை இடமாற்ற கோரி, பிரதேச மக்கள், பாடசாலை வளாகத்துக்குள், இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி அதிபர், பாடசாலையின் மலசலகூடத்துக்கு நீரை ஊற்றுமாறு, குறித்த பாடசாலையில் தரம் 4இல் கல்விப் பயின்றுவரும் மாணவர் ஒருவரை பணித்துள்ளார். குறித்த மாணவன், பாடசாலை வளாகத்திலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீரை எடுக்கச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்துள்ளான். மாணவன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட அயலவர்கள், உடனடியாக மாணவனை மீட்டுள்ளனர்.
அதிபரின் எதேச்சதிகார போக்கு காரணமாக மாணவனின் உயிர் பறிபோகவிருந்ததாகவும் எனவே, இவ்வாறான தவறுகள் இனியும் இடம்பெறக் கூடாது என்பதால், பாடசாலையின் அதிபரை உடனடியாக இடமாற்றுமாறு கோரியே, அப்பகிரன்லி தோட்டத் தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவ்விடத்துக்கு வருகைத்தந்த நுவரெலியா கல்வி திணைக்களத்தின் கோட்டம் மூன்று பணிப்பாளர் எம்.ஜெயராம், பெற்றோரின் கோரிக்கையை கேட்டுகொண்டதுடன், அதிபரை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பணிப்பாளரின் உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த எதிர்ப்பு நடவடி்ககையில் சுமார் 100இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






57 minute ago
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
8 hours ago
8 hours ago