2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன், வைத்தியசாலையில் அனுமதி

Sudharshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. இராமசந்திரன்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வெள்ளிக்கிழமை (05) காலை பத்து மணியளவில்; பாடசாலை ஆலயத்திலுள்ள பூஜை பொருட்கள் காணாமற் போனதையடுத்து, தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்களை குறித்த  அதிபர் அழைத்து அடித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலை விட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு, இரவு திடீரென வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மாணவனை பெற்றோர் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவே கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யதுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாராணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .