Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பிக்கு ஒருவருக்கு 3000 ரூபாய் அபராதம் விதித்து, பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார்.
பதுளைப் பகுதியின் ரில்பொல விகாரையின் பிக்குவுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை - ஸ்பிரிங்வெளி பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்தான விசாரணையின் போது, முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பிக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்திச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில ஆஜர் படுத்தப்பட்ட போது, அவருக்கு அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago