2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அனர்த்தங்கள் ஏற்படும் கட்டடங்களுக்கு ஸ்டிக்கர்கள்

சிவாணி ஸ்ரீ   / 2020 மே 31 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயங்கள் உள்ள பிரதேசங்களிலுள்ள அனைத்துக் கட்டடத் தொகுதிகளையும் அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயங்கள் உள்ள பிரதேசங்களின் வீடுகள், கட்டடத் தொகுதிகளை அடையாளப்படுத்தும் முதல் கட்டப் பணி, இரத்தினபுரி மாவட்டத்தில் கபுகம்பிட்டிய பிரத்தேசத்தில் நேற்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினூடாக வழங்கப்பட்டுள்ள, “அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” எனும் ஸ்டிகர்கள், அனர்த்தம் ஏற்பட்டுள்ள வீடுகள், கட்டடங்களுக்கு ஒட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சப்ரகமுவ மாகாணத்தில், அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடத் தொகுதிகளுக்கும் இந்த ஸ்டிக்கர் மூலம் அடையாப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .