2025 மே 19, திங்கட்கிழமை

அனுமதியற்ற கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கட்டுகஸ்தோட்டை பொலிஸாரும் கண்டி மாநகர சபை அதிகாரிகளும் இணைந்து, கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள அனுமதியற்ற நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று (05) காலை ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டன.

நடைபாதை கடைகளினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அசௌகரியங்கள் தொடர்பில்  கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு, கண்டி மாநகர சபை மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த கடைகளை அப்புறப்படுத்த, நடைபாதை வியாபாரிகளுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை கடைகளை அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X