Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் வரை, அதன் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜாவின் பொறுப்பில், காங்கிரஸ் தனது செயற்பாடுகளை முன்னெக்கும் என்று, இ.தொ.கா இளைஞரணிச் செயலாளரும் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெறுவதாக, சமூக ஊடகங்களிலும் பரவலாகவும் பேசப்பட்டு வருவதாகவும் ஆனால், அவ்வாறான ஒரு போட்டி நிலை, இ.தொ.காவுக்குள் இல்லை என்றுத் தெரிவித்த அவர், உண்மைக்குப் புறம்பான விடயங்களைப் பரப்பி, மக்களை குழப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், காங்கிரஸின் இன்றைய ஒற்றுமையைப் பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குடும்பத்தில் பிளவுகளை ஏற்படுத்தவே பலர் எத்தனிக்கின்றனர் என்றும் சாடிய அவர், உண்மைக்குப் புறம்பான விடயங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸின் ஒற்றுமையை சகித்துகொள்ள முடியாத சிலர், கட்டுக்கதைகளைக் கூறிவருகின்றனர் எனவும் காங்கிரஸ் மேலும் பலப்படுத்தப்படுமே தவிர, காங்கிரஸுக்குள் பிளவுகள் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், காங்கிரஸின் மூத்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் மறைவின் பின்னர், சுமார் ஒன்றரை வருடம், தலைமைத்துவம் இன்றியே காங்கிரஸ் வழிநடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பொதுத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், ஜனநாயக ரீதியில் காங்கிரஸின் தேசிய சபை கூடி, காங்கிரஸின் தேசியத் தலைவரை தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதுவரை காங்கிரஸின் பொதுச்செயலாளர் அனுசா சிவராஜாவின் பொறுப்பில், காங்கிரஸ் ஜனநாயக ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago