R.Maheshwary / 2022 ஏப்ரல் 21 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மக்களை வதைக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹட்டனில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில் வைத்து தீயிட்டு கொளுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலக மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ஹட்டன் -ஸ்டிரதன் தோட்ட பகுதியைச் சேர்ந்த, பெருந்தோட்ட மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாது, போராட்டத்தில் இறங்கினர்.
இப்போராட்டத்துக்கு முன்னர், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சொரூபத்திற்கு முன்பாக மக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் எனவும் பிரார்த்தித்தனர்.



3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago