Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Gavitha / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இலங்கை அரசமைப்புத் திருத்தத்தில் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் திருப்பதிகரமாக அமைந்துள்ளது என்றும் தன்னுடைய தலைமையில் மீண்டும் ஒருமுறை அந்தக் குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு எற்பட்டுள்ளது என்றும் பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மலையக மக்கள் முன்னணி என்ற வகையில், அரசமைப்பு நிபுணர் குழுவைச் சந்தித்து தங்களது யோசனைகளை முன்வைத்திருந்ததாகவும் இதன்போது தங்களது யோசனைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களால் முன்வைக்கப்பட்ட அநேகமான யோசனைகள் புதியவை என்றும் இது தொடர்பாக இன்னும் அதிகமான விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் எனவே மீண்டும் ஒரு முறை, தங்களத குழுவினரைசு் சந்திக்க நேரம் ஒதுக்கி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணனின் பணிப்புரைக்கு அமைவாக, தன் தலைமையில் மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழுவில் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ் உப தலைவர் சிவலிங்கம் சதீஸ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசமைப்பு சீர்த்திருத்த நிபுணர் குழுவினருக்கு, பல தகவல்களை வழங்கவுள்ளதாகவும் அந்த வகையில், மலையக மக்களைப்பற்றி மாத்திரம் யோசனைகளை முன்வைக்காது, இலங்கையில் வாழ்கி்ற சிறுபான்மை மக்களாகிய மலையகத் தமிழர்கள், வடகிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பினருடைய விடயங்கள் தொடர்பான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த அரசியல் நிபுணர் குழுவுக்கு, தங்களைப் போன்று, இன்னும் மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மலையகப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago