2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அவரச இலக்கத்துக்கு பொய்யான முறைப்பாடு; ஒருவர் கைது

எஸ்.சதிஸ்   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு, தொடர்ச்சியாக பொய்யான முறைபாடுகளைப் பதிவு செய்தார் என்றக் குற்றச்சாட்டில் ஒருவரை நோர்வூட் பொலிஸார், நேற்று (30) கைதுசெய்துள்ளனர்.

நோர்வுட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், தொடர்சியாக 119 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பொய்யான முறைபாடுகளைப் பதிவுசெய்து வந்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார்,  அழைப்புகளை  ஏற்படுத்திய இலக்கத்தின் உரிமையாளரை இனங்கண்டுக் கொள்வதற்காக  ஹட்டன் நீதிமன்றத்தில் பீ அறிக்கையை சமர்ப்பித்து அதன் ஊடாக அனுமதியைப் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து  அலைபேசியையும் மீட்டுள்ளதோடு சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .