Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆசிரியர் பயிற்சிசாலையொன்றில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் பயிலுனர் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் சுயதனிமைக்காக அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியர் பயிலுனர் சாலைக்கு இம்முறை புதிதாக 68 பேர் வருகைத் தந்ததுடன், அவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் (19) ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே, குறித்த இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.
இவர்கள் திம்புள பத்தனை மற்றும் நுவெரெலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
36 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
2 hours ago