Editorial / 2020 மே 18 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தமது ஒருநாள் சம்பளத்தை கொவிட் -19 நிவாரணத்துக்கான சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு வழங்க முன்வந்துள்ளதாக, ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்தை சேர்ந்த சுமார் 3,000 ஆசிரியர்கள் தமது ஒருநாள் சம்பள வேதனமான ஆயிரம் ரூபாயை மேற்படி நிதியத்துக்கு வழங்க முன்வந்துள்ளனர் என்றும்
இதற்காக, அனைத்து பாடசாலைகளிருந்தும் அதிபரூடாக இணக்கபாட்டுக் கடிதத்தைப் பெற்று, அதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலேயே இந்தத் தொகை அறவிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவரிடமே இந்தத் தெகை பெறப்படும் என்றும் மத்திய மாகாணத்திலுள்ள கல்வி நிர்வாக சேவை உத்தியோத்தர்களும் தமது அடிப்படை சம்பளத்தின் 20 சதத்தை இந்த நிதியத்துக்கு கடந்த மாதம் வழங்கியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago