2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2016 ஜூன் 08 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், செ.தி.பெருமாள்

மஸ்கெலியா ஆதார வைத்தியசாலை வளாகத்திலிருந்து  எஸ்.செல்வசுந்தர் (வயது 49) என்பவரின் சடலத்தை மஸ்கெலியா பொலிஸார் நேற்று(7) இரவு மீட்டுள்ளனர்.

மஸ்கெளியா, பிரிவுன்வீக் தோட்டத்தைச் சேர்ந்த நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுகவீனமுற்ற நிலையில் நேற்று மாலை  மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், நள்ளிரவு 12 மணியளவில் வைத்தியசாலை வளாகத்திலுள்ள  சிறுவர் பூங்காவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .