2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆபாச சீடிகளுடன் 69 வயதானவர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஆபாச காட்சிகள் அடங்கிய நான்கு இறுவட்டுக்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 69 வயதுடைய முதியவர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை (17) கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அவசரபிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட அலவத்துகொடை பொலிஸார், சந்தேகநபரை, அலவத்துகொடை, துனுவிலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர், குறித்த வீட்டில் தனிமையிலேயே வசித்து வந்துள்ளார்.

இவரிடமிருந்த சுமார் 35 இறுவட்டுக்களுள் நான்கு இறுவட்டுக்களில் ஆபாச காட்சிகள் அடங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர், நான்கு பிள்ளைகளின் தந்தை என்றும் அவரது பிள்ளைகளும் மனைவியும் வேறு இடங்களில் வாழ்வதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .