2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆய்வு அலகு அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2017 மே 04 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் தொடருறு கல்வியலகின் ஏற்பாட்டில், ஆய்வு அலகு ஒன்று, இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மலையக பெருந்தோட்டக் கல்வியில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வித்துறையோடு தொடர்புடையவர்கள், பயிலுநர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் நோக்கில் இவ்வாய்வு அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப்பிரிவு, கணிதம், சமூகவிஞ்ஞானம், தமிழ், நடனம், கர்நாடக சங்கீதம், இந்துசமயம், விஞ்ஞானம், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப கற்கைநெறி துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 1,800 ஆய்வுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .