2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

இ.தொ.காவின் கள விஜயம்

Kogilavani   / 2017 மே 17 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தின்போது, காங்கிரஸின் அழைப்பை ஏற்று, நோர்வூட் மைதானத்தில் அணித்திரண்ட ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு, இன்று  கள விஜயம் மேற்கொண்டனர்.

இக்குழுவில் நுவரெலியா மாவட்ட எம்.பிகளான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், எ.பி.சக்திவேல், பிலிப்குமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர். 

இதன்போது உரையாற்றிய ஆறுமுகன் தொண்டமான் எம்.பி

“இ.தொ.காவின் அழைப்பை ஏற்று நோர்வூட் மைதானத்தில் அணித்திரண்ட ஆதரவளார்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்” என்றார்.

இதேவேளை, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால், இ.தொ.காவின் மக்கள் பலம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர், நோர்வூட் மைதான மேடையில், அமரர் செளிமியமூர்த்தி தொண்டமானை புகழ்ந்து பேசியதனூடாக, இ.தொ.காவின் வரலாறு, பலருக்கும் புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன்” என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .