2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இ.போ.ச பஸ்களில் மாணவர்கள் புறக்கணிப்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

'மாத்தளை -கண்டி வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில், பாடசாலை மாணவர்கள் ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்படுவதால், அவர்கள் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்' என பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

கண்டி நகரிலுள்ள பிரதான பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், பயணச் சீட்டுகளை பெற்றுள்ளதுடன், அவர்கள் மாத்தளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் பஸ்களிலேயே பாடசாலைக்கு செல்லவேண்டி உள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு பாடசாலை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதனால், உரிய நேரத்துக்கு  பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது குறித்து உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .